யாழ்.ஊடகவியலாளர் வீட்டின் மீதான தாக்குதலின் பின்னணியில் புலனாய்வாளர்கள் ? - Global Tamil News

Source: Global Tamil News
யாழ்ப்பாணம் - அச்சுவேலியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். குறித்த தகவலறிந்து நேற்று அங்கு சென்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இந்த சம்பவத்தை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். தாக்குதலுக்கு பின்னர் துண்டுப்பிரசுரம் போடப்பட்டிருக்கின்றது. எங்களைப் பொறுத்தவரையில் குறித்த தாக்குதலை நடத்தியவர்களின் பின்னணியை மூடி மறைப்பதற்காக குறித்த துண்டுப்பிரசுரங்கள் போடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். திருநங்கை சார்ந்த தரப்புக்களால் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை.