யாழ். நெடுந்தீவில் இரு குழுக்களுக்கு இடையே மோதல் ; ஒருவர் உயிரிழப்பு! | Virakesari.lk
Source: Virakesari.lk
யாழ். நெடுந்தீவில் இரு குழுக்களுக்கு இடையே மோதல் ; ஒருவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் இன்று வியாழக்கிழமை (20) இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் நேற்று இரவு இரு குழுக்களுக்கு இடையே தாய்த்தர்க்கம் ஏற்பட்டு குறித்த சம்பவத்தை தொடர்ந்து இரு குழுக்களுக்கு இடையே இன்றையதினம் அதிகாலை ஒரு மணியளவில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் நெடுந்தீவு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இச்சம்பவத்தின் போது, 23 வயதுடைய அன்ரன் ஜீவராஜ் அமல்ராஜ் என்பவரே உயிரிழந்துள்ளார்.