கொழும்பு - பதுளை வீதியில் நீண்ட தூர பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன | Virakesari.lk
Source: Virakesari.lk
கொழும்பு - பதுளை வீதியில் இயங்கும் அனைத்து நீண்ட தூர பஸ் சேவைகள் இன்று திங்கட்கிழமை (11) முதல் உடுவர, ஹாலி-எல வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) ஹாலி எல்ல உடுவர பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பதுளை - கொழும்பு வீதியின் ஒரு பகுதி கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
அதன்படி, அடம்பிட்டிய மாலிகதென்ன ஊடாக பண்டாரவளை வீதியை அந்த வீதியில் பயணிக்கும் கனரக வாகனங்களுக்கு மாற்று வீதியாக பயன்படுத்த முடியும்.
இலகுரக வாகனங்கள் பண்டாரவளை வீதியில் செல்ல முடியும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.