Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

நல்லூர் புகழ் பிரசன்ன குருக்களின் குரலில் வெளியான பாடலுக்கு பலரும் பாராட்டு | Virakesari.lk

நல்லூர் புகழ் பிரசன்ன குருக்களின் குரலில் வெளியான பாடலுக்கு பலரும் பாராட்டு | Virakesari.lk

Source: Virakesari.lk

யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவிலில் "கட்டியம்" சொல்லி பிரசித்தி பெற்ற பிரசன்ன குருக்கள் பாடிய திரைப்பட பாடல் ஒன்று பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

தென்னிந்திய திரைப்பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இப்பாடலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

ஈழத்து இளைஞர்களால் தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்ற "புத்தி கெட்ட மனிதரெல்லாம்" திரைப்படத்தினை தொடர்ந்து, அந்த படத்தின் இயக்குனர் ராஜ் சிவராஜ் இயக்கத்தில் "டக் டிக் டோஸ்" எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.

வெகு விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த திரைப்படத்தின் பாடல் ஒன்றினை நல்லூரில் "கட்டியம்" சொல்லி பிரசித்தி பெற்ற பிரசன்ன குருக்கள் பாடியுள்ளார்.

திரைப்படத்தின் இசையமைப்பாளர் பூவன் மதீசன் பாடலுக்கு இசை அமைத்துள்ளார். பாடல் வரிகளை சாந்தகுமார் எழுதியுள்ளார்.

குறித்த பாடல் TRM Pictures youtube தளத்தில் அண்மையில் வெளியாகிய நிலையில், பலரது கவனத்தையும் ஈர்த்து பலரும் பாடகரான , பிரசன்ன குருக்களின் குரலை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.