வன விலங்குகளை வேட்டையாடிய வர்த்தகர் உட்பட நால்வர் கைது | Virakesari.lk
Source: Virakesari.lk
புத்தளம் - நாகமடுவ பிரதேசத்தில் வன விலங்குகளை வேட்டையாடிய வர்த்தகர் உட்பட நால்வர் துப்பாக்கிகளுடன் கருவலகஸ்வெவ வன விலங்கு அதிகாரிகளால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் புத்தளம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
குறித்த நபர்களிடமிருந்து 12 துப்பாக்கிகள், 4 வெற்றுத்தோட்டாக்கள் மற்றும் வேட்டையாடப்பட்ட விலங்குகளை கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட கேப் ரக வாகனம் ஆகியன வனவிலங்கு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட வர்த்தகருக்கு நாகமடுவ பிரதேசத்தில் காணி ஒன்று இருப்பதாகவும் ஒவ்வொரு விடுமுறை நாட்களும் அத் தோட்டத்திற்கு வந்து விலங்குகளை வேட்டையாடுவதாகவும் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.